என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி.
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
- செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி கலந்துகொண்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினார்.
பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் பற்றிய சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.
Next Story






