என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
    X

    பறவை காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.

    முத்துமாரியம்மன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

    • பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் பறவை காவடிகள் எடுத்தும், மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
    • முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவோணம்:

    திருவோணத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் 9 ஆம் நாள் திருவிழாவாக முத்துமாரி அம்மனுக்கு இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பால்குடம் காவடிகள் மற்றும் பறவை காவடிகள் எடுத்தும் மாவிளக்கு போட்டு வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 10ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.

    Next Story
    ×