search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்

    கம்பத்தில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்டு

    • கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு அதிக பணம் பெற்றதாகவும், அனுமதி பெறாமல் இணைப்புகள் வழங்கியதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
    • முறைேகடு தொடர்பாக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவில் பிட்டராக பணிபுரிந்து வந்தவர் வேல்முருகன். இவர் நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு அதிக பணம் பெற்றதாகவும், அனுமதி பெறாமல் இணைப்புகள் வழங்கியதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இது குறித்து ஆணையர் பாலமுருகன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசா ரணையில் 10 வீடுகளுக்கு அனுமதி பெறாமலேயே இணைப்பு கொடுத்ததும், குழாய் இணைப்பு வழங்கு வதற்கான அதிகாரிகள் கையெழுத்தை போலியாக போட்டு ஆவணம் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து வேல் முருகன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து ஆணையர் பால முருகன் தெரிவிக்கையில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் ஆவணங்கள் முறைேகடு தொடர்பாக வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முறைகேடுகளில் ஈடு பட்டதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி–யுள்ளார். இவர் பணியாற்றிய காலங்களில் வேறு ஏதேனும் முறைகேடு கள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என்றார்.

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் கணினி மயமாக்கப்பட்டு ள்ளன. இது போன்ற சூழலிலும் குடிநீர் குழாய் இணைப்பு, நகராட்சி அதிகாரியின் அனுமதியின்றி அங்கு பணிபுரியும் ஊழி யரே தன்னிச்சையாக கொடுத்துள்ளார் என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    தனி ஒருவராக இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இச்சம்ப வத்தில் மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நகராட்சியில் இது போல முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பு எத்தனை உள்ளது? என்பதையும் ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

    Next Story
    ×