என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரத்தில் இன்று நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்திக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் சித்சபையிலும், மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் ராஜசபையிலும் ஆனந்தநடராஜருக்கு மகாஅபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும்.

    இந்தஆண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 1–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை, இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 5–ந் தேதி இரவு விடியவிடிய கோலாகலமாக நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனிதிருமஞ்சன தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவராகிய ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் உற்சவராக புறப்பட்டு கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. தேரோடும் 4 வீதிகளில் வழியாக தேர் வலம் வந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சாமி நிலைக்கு வந்தபிறகு இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் விடியவிடிய லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து, ஆனி திருமஞ்சன மகா தரிசனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அப்போது அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆனந்தநடராஜருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மேல் மகாதரிசன நிகழ்வு நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    திட்டக்குடியில் தமிழ்நாட்டில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.
    பெண்ணாடம்:

    திட்டக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கொண்டாடும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்கு அரசு உரிய அரிசி வழங்க வேண்டும். ராமானுஜரின் ஆயிரமாவது விழாவை மத்திய, மாநில அரசுகள் தேசிய விழாவாக கொண்டாட வேண்டும்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் 1 லட்சம் பேர் தாய் மதத்திற்கு திரும்பும் முயற்சியை எடுத்துள்ளோம். வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினவிழாவின் போது, கச்சத்தீவில் நமது உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசே அங்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அங்கு ஒரு விநாயகர் கோவிலையும் கட்டித்தர வேண்டும்.

    கடலூர், திருப்பூர் பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதை அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

    ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதையும், வாணியம்பாடி அருகே கனகநாச்சியார் கோவில் நிர்வாகத்தை ஆந்திர அரசு அத்துமீறி எடுத்துக்கொண்டதையும் கண்டித்து வருகிற 12-ந்தேதி பாலாறு அணை அருகே இந்துமக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிதம்பரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் வழிபடவேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
    சிதம்பரம்:

    தமிழர் பேரமைப்பின் 9-வது மாநாடு தஞ்சாவூரில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.

    கூட்டம் முடிந்தபின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைமலை அடிகள் பிற மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்டு, தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி, மக்களுக்கு உணர்வு ஊட்டினார். ஆனால் தற்போது, ஆங்கில மொழியில் சிக்கி சீரழிந்து வருகிறோம். மறைமலை அடிகள் எந்த நோக்கத்திற்காக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கி வைத்தாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தமிழ் மொழியை அரங்கேற்றுவதற்காக இந்த மாநாடு தஞ்சையில் நடத்தப்படுகிறது.

    நடராஜர் கோவிலுக்கும், தீட்சிதர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனால் நடராஜர் கோவில் அவர்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நடராஜர் கோவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தமிழில் தான் வழிபடவேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலை மீண்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். அதற்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்குவதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால் வரும் பொங்கலில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூரில் சிறு மளிகைக்கடையை நடத்திக் கொண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது நடவடிக்கை பாராட்டலாம். எனினும் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தாமாக முன்வந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதன் மூலமாக தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    மத்திய அரசு சில பணிகளை ஆரவாரம் இல்லாமல் செய்து முடித்துள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றுதல், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்குவதற்கான சட்டத்திருத்தம் ஆகியவை பா.ஜ.க.வால் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எனவே, வரும் பொங்கலில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் நிறைவு பெறாது. பொங்கல் இல்லாமல் தமிழர்களின் பண்பாடும் நிறைவடையாது.

    மத்திய அரசு இணையதளம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அரசுடன் மோடி மேற்கொண்டு வரும் முயற்சியினால் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அவரது அறிக்கைகளில் விரக்தி மட்டுமே தெரிகிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து விடும் என்று அதீத நம்பிக்கையில் இருந்த கருணாநிதி தற்போது தோல்விக்கு புதிய காரணங்களை கண்டுபிடித்து வருகிறார்.

    தற்போது மத்திய அரசு ஆதரவு அளித்ததால் தான் அ.தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது என்று கூறி வருகிறார். இது அவரது விரக்தியின் வெளிப்பாடு தான்.

    நதி நீர் இணைப்புக் குறித்து பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற தீவிரமாக உள்ளோம். விந்திய மலைக்கு தெற்கில் மகாநதி கோதாவரியுடனும், கோதாவரி கிருஷ்ணாவுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணா நதி காவிரியுடன் இணைக்கப்படுவதில் தான் தாமதம் ஏற்படுகிறது.

    ஏனெனில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்தால் தான் கிருஷ்ணா நதி காவிரியுடன் இணையும் போது அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க வழி ஏற்படும். இல்லையெனில் தண்ணீர் வீணாகக் கடலுக்குள் செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பண்ருட்டியில் மீன்கேட்டு தகராறு செய்து லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 40) மீன் லாரி டிரைவர். நேற்று மாலை கடலூரிலிருந்து லாரியில் மீன் ஏற்றி கொண்டு கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பண்ருட்டி அருகே வேதாக்கொல்லை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மீன் கொடுப்பதற்காக லாரியை நிறுத்தி மீனை அவர்களிடம் கொடுத்தார்.

    பின் வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிறு தொண்டைமாதேவி கிராமத்தை சேர்ந்த உத்திராபதி(33), ராஜாராம்(36), ராஜகோபால்(26), சீத்தா ராமன்(30) ஆகிய 4 பேர் எங்களுக்கு மீன் தாருங்கள் என்று கேட்டனர். அதற்கு மைக்கேல் மீனை விற்க மாட்டேன் கேரளா சந்தைக்கு கொண்டு செல்கிறேன் என கூறினார்.

    இதைகேட்ட அந்த 4 பேரும் ஆத்திரமடைந்து மைக்கேலிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி 4 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கினர். இதை பார்த்த மைக்கேலின் உறவினர்கள் இளவரசன், வீரமணி ஆகியோர் ஓடிவந்து மைக்கேலை அவர்களிடமிருந்து மீட்டனர். பின் இருதரப்பும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் மைக்கேல் அவரது உறவினர்கள் இளவரசன், வீரமணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து மைக்கேல் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து உத்திராபதி, ராஜாராம், ராஜகோபால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சீத்தாராமன் தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஆபாச படம் அனுப்பி கொலைமிரட்டல் என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லிக்குப்பம், ஜூலை.7–

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் ஹேமா(வயது 31). (பெயர் மாற்றப் பட்டுள்ளது)பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பண்ருட்டி யில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார்.

    தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகியோர் ஹேமாவிற்கு பேஸ்புக் நண்பர்களாக அறிமுகமானார்கள்.

    இவர்கள் பேஸ் புக்கில் பல தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

    பின்னர் செல்போன் மூலமாகவும் பேசி வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக ஹேமா அவர்களிடம் பேசுவதை தவித்தார்.

    கடந்த சில மாதங்களாக இவர்களுக்கும் ஹேமா விற்கும் தொடர்பு இல்லை. தற்போது ஹேமாவின் பேஸ்புக் நம்பரை சிலர் கண்டுபிடித்து ஹேமா விற்கு பேஸ்புக் மூலமாக ஆபாச படங்கள் அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து ஹேமாவின் தந்தை நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மகளின் செல்போனுக்கு மர்ம மனிதர்கள் ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டி வருவதாக கூறியிருந்தார்.

    இதையொட்டி நெல்லி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகிய இருவரும் பேஸ்புக்கில் ஆபாச படங்களை ஹேமாவுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையொட்டி நெல்லிக் குப்பம் இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு விரைந் தனர். அங்கு ஹரிகரன், பிரபாகரன் ஆகிய இரு வரையும் கைது செய்தனர்.

    இவர்கள் கடலூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப் பட்டார்கள். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து இவர்கள் இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஹரிகரன் என்ஜினீயரிங் பட்டதாரி. தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன்காலனியை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பிரபாகரனும் அதே பகுதியை சேர்ந்த வர் ஆவார். அவர் தூத்துக் குடியில் கூலிவேலை செய்து வந்தார்.

    மேலும் 7 பேருக்கு வலைவீச்சு

    மேலும் ஆபாச படம் அனுப்ப துணையாக இருந்ததாக சென்னையை சேர்ந்த காவியா, ராம்பிரபு தூத்துக் குடியை சேர்ந்த சேகர், ஷியாம் பென்னி, எறல், சிவகாசியை சேர்ந்த முரளி, பாலா ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெய்வேலியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அடுத்த தாண்டவன் குப்பத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் தாண்டவன்குப்பம் பஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் சிறுவனுடன் தகராறு செய்துக் கொண்டிருந்தார். இதைபார்த்த ராமன் இந்த தகராறை விலக்க சென்றார். அப்போது சசிக்குமாருக்கும், ராமனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் இவர்களை விலக்கி விட்டனர்.

    இதன் பின்னர் சசிக்குமார் அவரது நண்பர் சத்தியமூர்த்தியை அழைத்து கொண்டு ராமன் வீட்டுக்கு சென்று ராமனிடம் தகாத வார்தைகளால் திட்டி தகராறு செய்தார்.

    தகராறு முற்றியது. அப்போது சசிக்குமார் வைத்திருந்த அரிவாளால் ராமனை வெட்டினார். அதன்பின் சத்தியமூர்த்தி இரும்பு கம்பியால் குத்தியும் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராமன் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ராமனை மீட்டு என்.எல்.சி.பொது ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராமனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    ராமன் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து சசிக்குமார், சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
    ×