என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்- மாமல்லபுரத்தில் குதிரை, ஒட்டக சவாரிக்கு கட்டுப்பாடு
- மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
- மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் சவாரிக்கு பயன்படுத்த 25 குதிரை, ஒரு ஒட்டகம் உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்து விளையாட்டு அரங்கம் வரை செஸ் வீரர்கள் தினசரி வந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். பகுதிகளில் போலீசார் 24மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் சவாரிக்கு பயன்படுத்த 25 குதிரை, ஒரு ஒட்டகம் உள்ளது. இதனை ஓட்டுபவர்களுக்கு அடையாள அட்டையோ, சீருடையோ கிடையாது.
இதனால் போலீசார் அவர்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் குதிரைகளை ஓட்டுவதற்கு புதுப்புது நபர்கள் வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் குதிரை ஓட்டிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.
எனவே மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுவோருக்கு சீருடை கொடுக்கப்பட்டு உள்ளது போன்று மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டுபவர்களின் விபரங்களை முறையாக சேகரித்து சீருடையும், அடையாள அட்டையும் வழங்கினால் போலீசார் எங்களை தனியாக அடையாளம் காண முடியும். எங்களுக்கும் சிரமம் இருக்காது என்று குதிரை ஓட்டிகள் கூறி உள்ளனர்.






