search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் செண்டுமல்லி சாகுபடி பயிற்சி
    X

    கிருஷ்ணகிரியில் செண்டுமல்லி சாகுபடி பயிற்சி

    • விவசாயிக ளுக்கு வழங்க ப்பட்டுள்ள செண்டுமல்லி மற்றும் ரோஸ் நாற்றுகளை நல்ல முறையில் சாகுபடி செய்து வாழ்வாதாராத்தினை பெருக்கிக் கொள் வேண்டும்.
    • மலர் வளர்ப்புத் திட்டங்களை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்தி வருமானத்தை உயர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்

    கிருஷ்ணகிரி,

    லக்னோ தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையம் இணைந்து, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் மலர் வளர்ப்பு திட்டத்தினை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு செயல்படுத்தி வாழ்வாதாரத்தினை பெருக்கும் நோக்கில் மலர் சாகுபடி செய்யும் விவசாயி களின் நாற்றுகள் உற்பத்தி செலவினை குறைக்கும் வகையில் செண்டுமல்லி நாற்றுகளை 50 ஏக்கர் பரப்பளவு மற்றும் மிரபல் ரோஸ் மலர் நாற்றுக்களை 10 ஏக்கர் பரப்பளவிலும் வழங்கியுள்ளது.

    இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள விவசா யிகளுக்கு செண்டுமல்லி மற்றும் மிரபல் ரோஸ் சாகுபடி பயிற்சி வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் நடத்தப்பட்டது.

    இதற்கு மாவட்ட தோட்டக்கலைத்துறையின் இணை இயக்குனர் பூபதி தலைமை தாங்கி பேசுகையில், தோட்ட க்கலைத்துறையின் மானியத் திட்டத்தின் மூலம் விவசா யிகளுக்கு வழங்கப்படும் மலர் நாற்றுக்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களைப் பற்றியும்,

    இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிக ளுக்கு வழங்க ப்பட்டுள்ள செண்டுமல்லி மற்றும் ரோஸ் நாற்றுகளை நல்ல முறையில் சாகுபடி செய்து வாழ்வாதாராத்தினை பெருக்கிக் கொள் வேண்டு மென அறிவுறு த்தினார்.

    தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி விஜய் ஆனந்த்ராஜ், பயிற்சிக்கு முன்னிலை வகித்து பேசுகையில், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மலர் வளர்ப்புத் திட்டங்களை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்தி வருமானத்தை உயர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், மலர் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண் அறிவியல் மையத்தை அணுகி தீர்வு காணுமாறும், மலர் சாகுபடியில் சரியான தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல் பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார். வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு, விவசா யிகளுக்கு செண்டுமல்லி மற்றும் மிராபல் ரோஸ் சாகுபடி தொழில்நு ட்பங்களை பயிற்சி மூலம் வழங்கினார்.

    தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர் சின்னகருப்பன், வேளாண்மை அறிவியல் மைய பண்ணை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ராயக்கோட்டை, மூங்கி ல்புதூர், எலுமிச்சங்கிரி, மகாரா ஜகடை, கீழ்பூங்குருத்தி கிராமங்களைச் சேர்ந்த 60 விவசாயிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×