என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவள்ளூர் அருகே பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு
  X

  திருவள்ளூர் அருகே பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே சென்ற பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • மணவாளநகர் போலீசார் பலியான கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  திருவள்ளூர்:

  சென்னை முகப்பேர் 1-வது பிளாக்கை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 28). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் மோகன சுந்தரம் (38) என்பவருடன் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி சென்றார்.

  திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே சென்ற போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே சென்ற பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மோகன சுந்தரம் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணவாளநகர் போலீசார் பலியான கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×