என் மலர்
உள்ளூர் செய்திகள்

8 ஆயிரம் ஆடியோக்களை ஒளிபரப்பி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உலக சாதனை
- சாதனைக்கான சான்றிதழ்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- ஆசிரியர்களும், மாணவர்களும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குண சேகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தருமபுரி,
கொரோனா காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் சூழல் இருந்து வந்தது.
அப்பொழுது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், இணையதளத்தில் கல்வி வானொலி நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்பதற்காக மின்மினிகள் மின்னும் நேரம் என்ற பகுதியில் மாணவர்களின் வாசிப்புத் திறனையும், கற்றலையும் வலுப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகள் காயத்ரி, அனுராதா, மாலா, கவிதா, ராஜேஸ்வரி, பழனிச்செல்வி, கண்மலர், ஷர்மிளா பேகம் ஆகியோர் தன்னார்வமாக ஈடுபட்டு மாணவர்களை பங்கேற்க வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 150 பள்ளிகளைச் சேர்ந்த 2000 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 8000 ஆடியோக்களை இந்த இணையதள கல்வி வானொலியில் இடைவிடாமல் 60 மணி நேரம் ஒளிபரப்பினர்.
இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி உலக சாதனை நிகழ்வாக இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த ஆசிரியர்கள் மாணவர்க ளின் சாதனையை பாராட்டி புக் ஆப் ரெக்கார்ட் சாதனை பட்டியலில் பதிவு செய்துள்ளது.
இந்த சாதனைக்கான சான்றிதழ்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட ஆசிரியர்களும், மாணவர்களும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குண சேகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இணையதள கல்வி வானொலி நிகழ்ச்சியில் சாதனை படைத்த ஆசிரியர்களும் மாணவர்க ளும் கலந்து கொண்டனர்.