என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
தென்காசியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் புறப்பட்டு சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
- ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
தென்காசி:
தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாந்தி பன்னோக்கு மருத்துமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தமிழரசன், மருத்துவர் பிரிதிவிராஜ் கலந்து கொ ண்டனர். மருத்துவர் அன்பரசன், மருத்துவர் கவுதமி தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலை யத்தில் புறப்பட்டு, மேம்பா லம், கூலக்கடை பஜார், பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், அரசு பஸ் டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறை வடைந்தது. பேரணி ஆரம்பம் முதல் முடியும் வரை பெய்துவந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக நடந்து வந்த மருத்துவர்கள், மாணவ, மாணவிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன் முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரி பெரல் ஆஞ்சியோ கிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






