என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கல்
- கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பலமுரு பல்கலைக்கழக துணை வேந்தர் லட்சுமிகாந்த் ரத்தோடு மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்ட பாணி, நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றித ழ்களும் வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி துணை முதல்வர் கலைமணி சண்முகம் மற்றும் கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






