search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.
    • கொடிமரத்திற்கு 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.

    நெல்லை:

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம்.

    ஆவணி திருவிழா

    இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சையான ஒன்றாகும். மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று நடை பெற்றது.

    இதனையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    கொடி பட்டம்

    தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சி

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தர் மானூர் அம்பலம் புறப்படும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி யும், கரூவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெறும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதியும் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×