என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் ரெயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி- மர்ம நபருக்கு வலைவீச்சு
  X

  பாவூர்சத்திரத்தில் ரெயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி- மர்ம நபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.
  • சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தென்காசி:

  தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் கீப்பராக அம்பையை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

  நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வழக்கம்போல் அவர் பணியில் இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற பயணிகள் ரெயில் அந்த வழியாக சென்றபோது ரெயில்வே கேட்டை மூடி திறக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

  பின்னர் அவர் தனது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அவர் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். உடனே பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

  இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்த பெண் கேட் கீப்பரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  மேலும் அருகில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கேட்டின் அருகே மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

  அவர்களில் யாரேனும் இதில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

  பணியில் இருந்த ரெயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் பல நாட்களாக நோட்டமிட்டு ஊழியர் தனியாக இருப்பதை அறிந்து நேற்று உள்ளே புகுந்திருப்பது தெரியவந்துள்ளது.

  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×