என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு சுகதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட போது எடுத்தப் படம்.
பாரூர் அரசு மருத்துவமனையில்ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் விழா
- காசநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு ஊட்டசத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவர் தாமரைசெல்வி தலைமை வகித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் பிஎம்ஐ அளவு மிகவும் குறைவாகவும் மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காசநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு ஊட்டசத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவர் தாமரைசெல்வி தலைமை வகித்தார். பாரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவிகுமார், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி ஊட்டசத்து பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரபு, டிபி.சாம்பியன் சிவரஞ்சனி ஆகியோர் கலந்துகொண்டனர்.






