என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவா்கள் 8 பேர் சென்னை திரும்பினர்
- கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது புதுக்கோட்டை மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
- மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
ஆலந்தூர்:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் 8 மீனவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story






