search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூர் பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்
    X

    கடத்தூர் பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

    • பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வினோத், கவுன்சிலர் முனிராஜ். முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, பச்சையப்பன், சதீஷ்குமார் உள்ளிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வார்டு பகுதியில் போதிய குடி தண்ணீர், சாக்கடை கால்வாய்கள், தெருவிளக்கு கூடுதலாக அமைத்த தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×