என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.2.89 லட்சம் மதிப்பிலான விவசாய பயிர் கடன்கள்- மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

    • மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைப்பெற்றது.
    • ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில். கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா. ஆர்த்தி ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கினார்.

    அதேபோல் வேளாண் பொறியியல் சார்பில் ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் பா. ஜெயஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×