என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணமாகி 2 வருடங்களில் தூக்கில் தொங்கி இளம்பெண் தற்கொலை
- ஜோதி இரவு சுமார் 7 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஆர்.டி.ஓ.விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார்கள்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன். இவரது மனைவி ஜோதி (வயது 25).
இவர் நர்சிங் முடித்து தனியார் மருத்துவமனையில் பணி செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தன் தாத்தா இறந்து விட்டதால் அவருடைய இறுதி சடங்கிற்கு கலந்து கொள்ள செல்வதாக தன் கணவரிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஜோதி நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஜோதி உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோதிக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார்கள். இளம் பெண் தற்கொலை இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.