என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிப்பு
    X

    அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிப்பு

    • எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    எம்.ஜி.ஆரின், 35-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் முனி வெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் சேசவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அருகில் உள்ள கிட்டம்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில், எம்.ஜி.ஆரின் நினைவு சமாதிக்கு, மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி ரவுண்டானாவில், நகர செயலாளர் கேசவன் தலைமையில், எம்.ஜி.ஆரின் படத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

    நகர துணை செயலாளர் குரு, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், அவைத் தலைவர் ரியாஷ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜன், இலக்கிய அணி நகர செயலாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர்கள், சீனிவாசன், சென்னப்பன், பீட்டர், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×