search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை ஆடித்தபசு காட்சி
    X

    சுகாதார பணிகளை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை ஆடித்தபசு காட்சி

    • நாளை சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோவில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டு கடந்த 21-ந்தேதி ஆடித்தபசு திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று விமர்சையாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். தொடர்ந்து நாளை (திங்கட்கி ழமை) தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். மதியம் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் நின்றபடி, தவக்கோலத்தில் எழுந்தருள, மாலையில் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, தனது வலதுபாகத்தில் சிவனுக்குரிய அம்சங்களும், இடது பக்கம் திருமாலுக்குரிய அம்சங்க ளுமாக சங்கர நாராயணராக எழுந்தருளி, கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

    நகராட்சி சேர்மன் ஆய்வு

    இந்நிகழ்வையொட்டி கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோவில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆய்வு செய்தார். அங்கு சுகாதார பணிகள், தற்காலிக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் இடங்கள், ஏற்கனவே உள்ள கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் சுகாதார பணிகளை திருவிழா நாட்களில் முழு நேரமும் கண்காணித்து குப்பைகள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.

    தற்காலிக குடிநீர் வசதி, தற்காலிக குடிநீர் டேங்குகளில் குடிநீர் இருப்பை அடிக்கடி ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். மேலும் ஏற்கனவே உள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்த சேர்மன் உமா மகேஸ்வரி, கழிப்பிடத்தை நிர்வகித்து வருபவர்களிடம் அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், பக்தர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×