என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வண்டி சீட்டை கிழித்ததால் தகராறு  சேலத்தில் வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி
  X

  வண்டி சீட்டை கிழித்ததால் தகராறு சேலத்தில் வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெரு நாய்களுக்கு தினமும் இரவு உணவு அளிப்பது வழக்கம்.
  • பிரசாத் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டை கிழித்ததாக தெரிகிறது. இதை பிரசாத் தட்டி கேட்டுள்ளார்.

  சேலம்:

  சேலம் அம்மாப்பேட்டை தங்க செங்கோடன் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 24).

  இவர் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினமும் இரவு உணவு அளிப்பது வழக்கம். சம்பவத்தன்று தெரு நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வாலிபர், பிரசாத் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டை கிழித்ததாக தெரிகிறது. இதை பிரசாத் தட்டி கேட்டுள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், சாலையில் சென்று கொண்டிருந்த பிரசாத் மீது காரை மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாத் படுகாயமடைந்து அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×