search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை, புறநகர் பகுதிகளில் 7 கலை அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது
    X

    சென்னை, புறநகர் பகுதிகளில் 7 கலை அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது

    • ஒரு புதிய கல்லூரி முதல் ஆண்டில் 5 படிப்புகளுடன் கல்லூரியை தொடங்கலாம்.
    • பல்கலைக்கழகத்தின் ஒரு குழு புதிய கல்லூரிகளுக்கு சென்று வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. என்ஜினீரியங் கல்லூரிகளை நடத்தும் 2 கல்வி அறக்கட்டளைகள் ஸ்ரீபெரும்புத்தூரில் 2 கல்லூரிகள், நெமிலி, கும்மிடிப்பூண்டி, புதிய பெருங்களத்தூர், புதூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா ஒரு கல்லூரி என மொத்தம் 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க சென்னை பல்கலைக்க ழகத்தில் விண்ணப்பித்துள்ளன.

    மேலும் 36 கல்லூரிகள் வணிகவியல், கணினி அறிவியல், உளவியல் போன்ற புதிய பாடப்பிரிவுகளை தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் சென்னையில் உள்ள கல்லூரிகளில் மேலும் 5 ஆயிரம் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் டீன்(பொறுப்பு) ரங்கராஜன் கூறியதாவது:-

    ஒரு புதிய கல்லூரி முதல் ஆண்டில் 5 படிப்புகளுடன் கல்லூரியை தொடங்கலாம். பல்கலைக்கழகத்தின் ஒரு குழு புதிய கல்லூரிகளுக்கு சென்று வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்.

    அங்கீகாரம் பெறுவதற்கும் ஒரு கல்லூரி சென்னை நகர எல்லைக்குள் 3 ஏக்கர், புறநகர் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்புகளை கொண்டிருக்க வேண்டும. மேலும் 5 வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கேண்டீன் ஆகியவையும் இருக்க வேண்டும்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்ட போதிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இன்னும் தேவை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×