search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் 5-ம் ஆண்டு விழா
    X

    தென்காசியில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் 5-ம் ஆண்டு விழா

    • திட்டத்தின் சிறப்புகளை பற்றி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
    • ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்த 5-ம் ஆண்டு விழா கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலும், சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேம லதா முன்னிலையிலும் நடைபெற்றது.

    விழாவில் திட்டத்தின் சிறப்புகளைப் பற்றியும், பயன்கள் பற்றியும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார். மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்த பயனாளிகள் 5 பேருக்கு நினைவு பரிசும், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை 5 பேருக்கும், பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டை 5 பேருக்கும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு மருத்துவமனை மற்றும் 2 தனியார் மருத்துவமனைக்கு நினைவு பரிசுகளும் மற்றும் விழாவை ஒட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    விழாவில் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஜோதிவேல், தென்காசி அரசு மருத்துவமனை டீன் ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×