என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டையில் கந்துவட்டி கொடுமை- மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி கொலைவெறி தாக்குதல்
    X

    அருப்புக்கோட்டையில் கந்துவட்டி கொடுமை- மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி கொலைவெறி தாக்குதல்

    • வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கண்ணன் பாபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் பாபு (வயது 53). இவர் கருவாட்டுப்பேட்டை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

    இதற்காக கண்ணன் பாபு லட்சக்கணக்கில் வட்டியும், அசலும் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொடுத்த கடனுக்கு சாந்தகுமார் அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த கண்ணன் பாபுவை சாந்த குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து உதைத்து கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.இதை அறிந்த சாந்தகுமார் கும்பல் கண்ணன் பாபுவை விடுவித்தனர். கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கண்ணன் பாபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சாந்தகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராமதாசன், பாண்டியராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கண்ணன் பாபுவிடம் ரூ. 98 லட்சத்திற்கும் மேல் எழுதி வாங்கி இருந்த புரோ நோட்டுக்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×