என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவள்ளூரில் கலைஞர் உணவகம் திறப்பு- தினமும் மதிய உணவு இலவசம்
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. 365 நாட்களும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் வகையில் கலைஞர் உணவகத்தை திறந்து உள்ளார்.
திருவள்ளூர்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் 365 நாட்களும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் வகையில் கலைஞர் உணவகத்தை திறந்து உள்ளார்.
இதில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story