search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
    X
    விழப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    திடக்கழிவு மேலாண்மை கலை நிகழ்ச்சி

    மதுக்கூரில் திடக்கழிவு மேலாண்மை கலை நிகழ்ச்சி நடந்தது.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படியம், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரைப்படியும், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் தகவலின் படியும் மதுக்கூர் பஸ் நிலையத்தில் கலைமகள் நாடக சபா மூலம் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்ச்சி கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், கரகாட்டம் மேளதாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை, பன்றி காய்ச்சல் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது, பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது, மஞ்சள் பையை பயன்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல் மூலம் நடைபெற்றது. 

    ஆடல் பாடல் மேளதாளங்கள் முழங்க மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து எடுத்து சேகரித்தால் வரும் துப்புரவு பணியாளருக்கு எளிமையாக இருக்கும் என்றும் மேலும் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்ட வேண்டுமென்றும் கழிவு நீர் வாய்க்காலில் கொட்ட கூடாது என்றும் அவ்வாறு  கொட்டுவதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மழைநீர் சேகரிப்பு என கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×