search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் ஹோட்டல்
    X
    மாமல்லபுரம் ஹோட்டல்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி- மாமல்லபுரம் சுற்றுலா விடுதியில் ஒருங்கிணைப்பு குழுவுக்கு அதிநவீன அறை

    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது “செஸ் ஒலிம்பியாட்” போட்டி ஜூலை 28-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டி ஏற்பாடுகளுக்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் முதல் மாடியில் செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தனியாக அதிநவீன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தற்காலிகமாக 25 ஊழியர்கள் “ஷப்டு” முறையில் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தேர்வாகும் வெளிநாட்டு வீரர்களின் விபரங்கள், அவர்கள் நாட்டில் பகல் நேரத்தில் அவர்களிடம் கேட்டு தகவல்களை சேகரித்தல், அவர்களது நாட்டு தூதரங்களுடன் அலுவலக நேரத்தில் பேசுதல், விசா ஏற்பாடு செய்தல், விமான டிக்கெட் பதிவு செய்தல் போன்ற வெளிநாட்டு தூதரகம் தொடர்பான பணிகளுக்காக வேறு நாட்டு மொழிகள் தெரிந்தவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், செஸ் வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஓட்டல்களில் உள்ள வசதிகள், வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் அறைக்கு வருவது, ஓட்டலில் இருந்து விளையாட்டு அரங்கம் செல்வது, போட்டி முடிந்து செல்லும் இடங்கள் எங்கு என அனைத்தையும் “கேர்டு அனிமேசன்” ஒலி-ஒளி வரைபடமாக உருவாக்கி அதை பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது.
    Next Story
    ×