என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
    X
    பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு

    ஜூன்- 1ந்தேதி ஆண்டு தோறும் சர்வதேச பால் தினமானது கொண்டாப்படுகிறது.

    திருப்பூர்:

    ஜூன்- 1ந்தேதி ஆண்டு தோறும் சர்வதேச பால் தினமானது கொண்டாப்படுகிறது. அதனையொட்டி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய கூட்ட அரங்கில் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சிறந்த பால் உற்பத்தியாளர்களை கவுரவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பால் உற்பத்தி செய்து சங்கத்திற்கு பால் வழங்கிய3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    முதல் பரிசாக நாட்டுக்கோட்டையன் புதூரை சேர்ந்த முருகேஷ் என்பவருக்கு ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ஆலாம்பாடியை சேர்ந்த செல்வராஜ்க்கு ரூ 5 ஆயிரம். மூன்றாம் பரிசாக வேடப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு ரூ .3 ஆயிரம் அளிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழாவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர்( பால்வளம்) சைமன் சார்லஸ் மற்றும் ஆவின் பொது மேலாளர் ஏ. பி. நடராஜன், மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×