search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் டி.சி.டபுள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் டி.சி.டபுள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசியபோது எடுத்த படம்.

    சாகுபுரத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்

    சாகுபுரத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    ஆறுமுகநேரி:

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க 98-வது ஆண்டின் 7-வது செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன கலையரங்கத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகசங்கத்தின் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் தலைவர் ஜெகதீசன்  தீர்மானங்களை விளக்கி பேசியதாவது:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துறையில் முக்கியப்பங்காற்றி வருகின்றன. இவற்றின் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதமும், ஏற்றுமதி வணிகத்தில் சுமார் 40 சதவீதமும் நடந்து வருகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விளிம்பு நிலை உச்சவரம்பை குறைக்க வேண்டும்.

    திறன்களுடன் கூடிய போதுமான மனிதவளத்தை பெற ஏதுவாக மாநிலம் முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்களை அரசு அமைக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலையைக் குறைக்கும் பொருட்டு மானிய விலையில் ஒதுக்கீடு செய்யும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

    நமது மாநிலத்தின் முதுகெலும்பாக தொழில் வணிகத்துறையில் முக்கிய பங்காற்றி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர்கள் ஜீயர்பாபு, ரமேஷ், பொருளாளர் ஸ்ரீதர், இணைசெயலாளர்கள் ராஜிவ், முன்னாள் தலைவர் நீதிமோகன், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன உதவித்தலைவர் சுரேஷ், துணை உதவித்தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.
    Next Story
    ×