என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
    X
    மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள்

    திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அலுவலர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று வருவாய்த்தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட வருவாய் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலஅளவை சங்கிலி உள்பட உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மனுக்கள் அளிக்க வந்த பலர் இங்கு அலுவலர்கள் தங்கள் மனுக்களை முறையாக விசாரணை நடத்தாததால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் விசாகன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார். இதனைதொடர்ந்து மனுக்கள் அளித்த பல்வேறு நபர்களுக்கு உடனடி ஆணை வழங்கப்பட்டது.
    Next Story
    ×