என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மரத்தில் கூடு கட்டிய வண்டுகள் அழிப்பு
பாபநாசம் பகுதியில் மரங்களில் கூடு கட்டிய வண்டுகள் அழிக்கப்பட்டன.
பாபநாசம்:
பாபநாசம் தாலுக்கா அலுவலக ரோட்டில் அமைந்துள்ள தோப்பு தெரு குடியிருப்புகளில் புளியமரம் அமைந் துள்ளது.
இந்த மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி–க்கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்தது. உடனே இதுகுறித்து பேரூராட்சி துணைத்தலைவர் பூபதிராஜா பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலை வாணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து புளிய மரத்தில் கூடுகட்டி இருந்த விஷ வண்டுகளை மயக்கம் அடைய செய்து அனைத்தையும் அப்புறப்படுத்தினர்.
Next Story






