என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாவில் ரேசன் அரிசி பறிமுதல் செய்த போது எடுத்த படம்.
    X
    வாலாஜாவில் ரேசன் அரிசி பறிமுதல் செய்த போது எடுத்த படம்.

    வாலாஜாவில் 13 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    வாலாஜாவில் 13 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ரபிக் நகரில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள ஆற்காட்டை சேர்ந்த நபரின் சொந்தமான வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

    உணவு பாதுகாப்பு துறை தனி தாசில்தார் இளஞ்செழியன், குடிமை பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் முருகன், சர்புதீன் ஆகியோர் நேற்று இரவு அங்கு சென்று சோதனை நடத்தினர். 

    அப்போது அந்த வீட்டில் முதியவர் நாகராஜன் என்பவர் மட்டும் இருந்தார். வீட்டினுள் சென்று சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

    சுமார் 13 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜாவில் உள்ள சிபில் சப்ளை குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×