என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  உத்தமபாளையம் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 2 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தமபாளையம் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 2 பேர் மாயமானது தொடர்பாக காப்பக மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
  உத்தமபாளையம்:

  கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் சுசீந்திரத்தை சேர்ந்தவர் சுனில்ரோகித்(18). தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார்(17) ஆகிய 2 சிறுவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.

  அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் திடீரென மாயமாகினர். இதுகுறித்து காப்பக மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்தன் மகள் ஆர்த்தி(19). இவர் கம்பத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×