என் மலர்
உள்ளூர் செய்திகள்

90 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதியை அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதி- அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
திருபுவனை தொகுதியை சேர்ந்த 90 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதிைய அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
புதுச்சேரி:
புதுவை குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழும் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழும் திருபுவனை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டி உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.53லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சிற்றரசு, உதவி பொறியாளர் ரவி, இளநிலை பொறியாளர் சிவா, மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், நல ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






