search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சுண்டேகுப்பம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை- பஞ்சாயத்து தலைவி துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்

    சுண்டேகுப்பம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை என பஞ்சாயத்து தலைவி துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.
    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம்  ஒன்றிய பஞ்சாயத்து துணைத் தலைவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பெரியண்ணன் தலைமையில் சுண்டேகுப்பம் பஞ்சாயத்து நிர்வாகிகள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

    அந்த மனுவில் சுண்டேகுப்பம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் பஞ். தலைவியின் கணவர் நாராயணன் என்பவர் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டு தலைவர்  என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

     இதற்கு நேற்று சுண்டே குப்பம் ஊராட்சிமன்ற தலைவி எல்லம்மாள் சிவகுமார் காவேரிப்பட்டணம் துணைவட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு ஒன்று அளித்தார். 
    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    சுண்டே குப்பம் ஊராட்சி மன்ற  நிர்வாகத்தில் மூன்றாம் நபர் தலையிட்டு மற்றும் தலைவர் இருக்கையில் அமர்ந்து வருகிறார் என்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அது முழுக்க , முழுக்க  தவறான கருத்தாகும். 

    மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய எனது பணிகளில் வேறு எந்த தனிநபரின் தலையீடும் இல்லை, நான் சுயமாக எனது முடிவுகளையும் பணிகளையும் ஊராட்சி மன்ற சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறேன்.  

    மேலும் எங்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தான் எந்த ஒரு கடிதம் மற்றும் செயல் முடிவிற்க்கும், ஊராட்சியில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு மன்ற அங்கீகாரம் கோருவதாக இருந்தாலும் இது சம்பந்தமான கடிதங்களுக்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் என்ற முகவரியில் நான் கையொப்பம் இடுவதாக இருந்தால் பணம் கொடுத்தால் மட்டுமே கையொப்பம் இடுவேன் என கூறி வந்தார். 

    தலைவராகிய நான் எந்த ஒரு பணிக்காக அலுவல் சம்பந்த பணிகளுக்காகவும் எதற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மறுத்து விட்டேன்.இதற்குப் பிறகுதான் என் மீது தனி நபர் தலையீடு உள்ளது , என்று பொய்யான குற்றச்சாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்து உள்ளார்கள். 
    இவர்கள் குற்றச்சாட்டிற்க்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று  இருந்தார் அப்போது உடன் காவேரிப்பட்டினம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள்  வெண்ணிலா முருகேசன், அறிவொளி ராமமூர்த்தி, கோவிந்தசாமி, துரைசாமி, ரமேஷ், ரஞ்சித் குமார், மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×