என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ரூ.5லட்சம் மதிப்பில் சாலை பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    X
    ரூ.5லட்சம் மதிப்பில் சாலை பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    ரூ.5 லட்சத்தில் ஐபேடு காலனி- வெங்குப்பட்டு இணைப்பு சாலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சோளிங்கர் அருகே ரூ.5 லட்சத்தில் ஐபேடு காலனி வெங்குப்பட்டு இணைப்பு சாலையை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐபேடு காலனி மேட்டுத்தெருவில் இருந்து வெங்குப்பட்டு சாலை வரை இணைப்பு சாலை அமைக்க அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், முனியன் மகன் யாகா ஆகிய இருவரும் இணைந்து சாலையை அமைக்க தங்கள் சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதியதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்தனர்.சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், முனியன் மகன் யாகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் முனிரத்தினம்  எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 750மீட்டருக்கு சுமார் ரூ.5லட்சம் மதிப்பில் சாலை பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்த ஐய்பேடு மேட்டுத்தெ ருவிற்கு தங்கள் சொந்த பணத்தில் சாலை வசதி ஏற்பாடு செய்த ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், முனியன் மகன் யாகா ஆகியோரை எம்.எல்.ஏ. பாராட்டினார். 

    இந்த நிகழ்ச்சியில் ஐப்பேடு திமுக கிளை கழக நிர்வாகி கே.பூபாலன், மாயகிருஷ்ணன் , முன்னாள் வெங்குப்பட்டு ஊராட்சி தலைவர் சிவராமன், நகராட்சி துணை தலைவர் பழனி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×