என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்த காட்சி.
    X
    மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்த காட்சி.

    சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும்- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியறுத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியிடம் வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை மாநில சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் மணவெளி தொகுதிக்குட்பட்ட சின்னவீராம்பட்டினம் கடற்கரை பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளதால் இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த சந்திப்பின் போது கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் அருள்முருகன், மாநில பொருளாதார பிரிவு  அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×