என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மாமல்லபுரம் அருகே கார் மோதி பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் மோதியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  மாமல்லபுரம்:

  மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராணி(வயது60). தயிர் வியாபாரம் செய்து வந்தார். இவர் புதிய எடையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென ராணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி உயிரிழந்தார்.

  விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×