என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மோசடி
  X
  மோசடி

  பட்டதாரி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
  விருதுநகர்

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள டி.கரிசல்குளத்தை சேர்ந்தவர் அய்யனார். எம்.காம்., சி.ஏ. முடித்துள்ள இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

  இந்நிலையில் அய்யனார் திருச்சுழி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த கோகுல், கோபி ஆகியோர் தொலைபேசி மூலம் அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் மத்திய அரசுத் துறையில் வேலை இருப்பதாகவும் அதனை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினர். 

  மேலும் அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பி 2 பேரிடமும் பல தவணைகளில் ரூ. 10 லட்சத்தில் 900 கொடுத்தேன். பணம் பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை, இதனால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது பிரச்சினை ஏற்பட்டது. மேலும் பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். 

  எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவர் அதில் குறிப்பிடப்ப ட்டிருந்தது.


  இந்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×