என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசி மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.
வந்தவாசி மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
வந்தவாசி மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வந்தவாசி :
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் ஸ்ரீ மாரி அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.க்
பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சென்னாவரம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வீதி உலா வந்தது. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செய்தனர்.
Next Story






