என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வந்தவாசியில் சிறுபான்மை மக்களுக்கு கடனுதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

    வந்தவாசியில் சிறுபான்மை மக்களுக்கு கடனுதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு கடனுதவி வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் யாசர் அராபாத் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நவாப்ஜான், மாவட்ட குழு உறுப்பினர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் வீரபத்திரன் ஆர்ப்பா ட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் செல்வன், மாநில குழு உறுப்பினர் அப்துல் காதர் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

    சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி அளிப்பதாக நடத்தப்பட்ட முகாம்கள் மூலமாக வாக்குறுதி அளித்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகின்றனர். 

    டாம்கோ திட்டத்தின் மூலமாக  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஜெயினர்கள் மக்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜன், சீத்தல்சந், ஷேக் இஸ்மாயில் சரிப் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×