என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுரை
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகளை பொதுமக்கள் எச்சரிக்கையாக கையாள வேண்டுமா என போலீசார் அறிவுரை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக பொது மக்களிடையே முன் பணம் பெற்று பின்னர் தலை மறைவாகி வரும் மோசடிக் கும்பல்கள் அதிகரித்துவிட்டனர்.
மேலும் தற்சமயம் செல்போனில் தங்களுக்கு கடன் தேவை என்றால் உடனே தொடர்பு கொள்ளுங்கள் என குறுந்தகவல் வருகிறது.அதை நம்பி பொதுமக்கள் அவர்களின் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்பதற்காக அந்த எண்ணில் தொடர்பு கொள்கின்றனர்.
அதில் பணம் தேவை என்றால் அதற்கான ஆவணச் செலவுக்கான பணத்தை செலுத்த வேண்டும் என கூறுகின்றனர்.அதனை நம்பி பொதுமக்கள் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்துகின்றனர்.
அதன்பின்னர் லோன் தொகையை கேட்கும் போது அவர்களுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விடுகின்றனர்.இதுபோல் மோசடிக் கும்பல்கள் ஆன்லைனில் பணத்தை இரட்டிப்பு பெறலாம் என இணையதளம் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.
அதனை நம்பியும் பலர் முன்பணத்தை கட்டுகின்றனர்.அப்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இரட்டிப்பாக இருப்பது போல் காண்பிக்கப்படுகிறது.இதை நம்பி மேலும் மேலும் பணத்தை செலுத்திவிட்டு அந்த பணத்தை எடுக்க முயலும்போது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஏமாற்றப்படுவது தெரி–யவருகிறது.இதேபோல் செல்போனில் மோசடி நபர்கள் கடன் செயலியை அறிமுக–ப்படுத்தி பொது–மக்களிடம் பணம் பெற்று பல்வேறு மோசடிகளை செய்து வருகின்றனர்.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கூறும்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைனில் கடன் செயலிகள் மூலம் பணம் தருவதாக மோசடி செய்தது தொடர்பாக 180 புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்.மேலும் பொதுமக்கள் தங்களுக்கு பணம் தேவை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளை மட்டுமே அணுகி கடன் பெற்றுக் கொள்ளுங்கள்.செல்போனில் வரும் செயலிகள் மூலம் கடன் பெற முயற்சி செய்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மோசடி புகார்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் எனக் கூறினர்.

Next Story