என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா ஏற்படடுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.

    புதுவையில்  கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்று பரிசோதனை தொடங்கி உள்ளது. புதுவையில் ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

    இதில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, ஏனாமில் ஒருவர் என 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 10 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 9 பேர் என 20 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 99 ஆயிரத்து 423 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.  இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×