என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  தொழிலாளியை சாராய பாட்டிலால் தாக்கிய வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.பி.சி.டி. தெரியாது என கூறியதால் கூலி தொழிலாளியை சாராய பாட்டிலால் தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  புதுச்சேரி:

  திருக்கனூர் அருகே சுத்துகேணி புதுநகரை சேர்ந்தவர் மாணிக்கம். கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார். 

  அப்போது அங்கு சாராயம் குடித்துக்குகொண்டிருந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த சத்யராஜ்(வயது31) என்பவர் மாணிக்கத்திடம் பேச்சு கொடுத்தார். இருவரும் மது குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். 

  அப்போது மாணிக்கத்திடம் சத்யராஜ் ஏ.பி.சி.டி. தெரியுமா? என கேட்டார்.  அதற்கு மாணிக்கம் தனக்கு எதுவும் படிக்க தெரியாது என தெரிவித்தார். ஏ.பி.சி.டி. தெரியாமல் இத்தனை காலம் ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என கூறி மாணிக்கத்திடம் சத்யராஜ் தகராறு செய்தார்.

  இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ் தான் குடித்துக் கொண்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து மாணிக்கத்தின் தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

  இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

  பின்னர் இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு  செய்து சத்யராஜை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×