என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வாலிபருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை(21). கார் ஓட்டுநரான இவருக்கு, அதே பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 9.3.21 அன்று ராஜதுரை, மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து,
ராஜதுரையை கைது செய்து றையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மாணவியை கடத்திச் சென்றதற்காக குற்றவாளி ராஜதுரைக்கு 10 ஆண்டுகளும், அவரை பாலியல் பலாதகாரம் செய்தமைக்காக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் ரூ.10 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






