என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    கிராம மக்களுக்கு இடையூறாக லாரிகளை இயக்கக்கூடாது

    கிராம மக்களுக்கு இடையூறாக லாரிகளை இயக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாபதி கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறிாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சமூகஆர்வலர்கள் தமிழ்களம் இளவரசன, சங்கர், கார்த்திக்குமார், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்குமுத்து, பொதுமக்கள் சின்னதுரை, ராமச்சந்திரன், முடிமன்னன், பாலசுப்பிரமணியன், இளங்கோவன், ரமேஷ் ரவி சங்கர் உட்பட பலர் தங்களது கருத்துகளை பதிவு  செய்தனர்.

    அப்போது விரிவாக்கம் செய்யப்படும் சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல்லை ஏற்றி ஆலைக்கு செல்லும் லாரிகள் கிராமங்களுக்குள் பொதுமக்களுக்கு இடையூறாக செல்லக்கூடாது. மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையை பயன்படுத்த வேண்டும். 

    சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள பகுதியின் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சுண்ணாம்புக்கல்லை தோண்டி எடுக்க வேண்டும். முடிவடைந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வேண்டும். விபத்துகள் ஏற்படாத வண்ணம் லாரிகளை இயக்க வேண்டும் .

    இதுபோன்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட காவல் துறையினர், போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை உயர அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×