search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.
    X
    அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    ரெயில்வே கேட் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்யக்கூடாது சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    அரும்பார்த்தபுரம் கேட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை வீடுகளை காலி செய்யக்கூடாது என ரெயில்வே அதிகாரிகளிடம் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி சுமார் 100 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். 

    இந்த குடும்பத்தினரை காலி செய்ய ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால்  பாதிக்கப்படும் மக்கள் அரசிடம் முறையிட்டனர். 

    இதனையடுத்து அரசு அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை மாற்று இடம் ஒதுக்கி தரப்படவில்லை.

    இந்த நிலையில்  ரெயில்வே  அதிகாரிகள் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகளை காலி செய்யும்படியும்  அங்குள்ள மக்களிடம் வலியுறுத்தினர். 

    இதுபற்றி அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.விடம்  முறையிட்டனர்.

    இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில்வே துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. 

    அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்படும் வரை காலி செய்ய வற்புறுத்தாதீர்கள், பட்டா வழங்கியவுடன் வீடுகளை அவர்களே காலி செய்துவிடுவார்கள் என உறுதியளித்தார். 
    இதனையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
    Next Story
    ×