என் மலர்
உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தியாகதுருகம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.
அதன்படி காலை சாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்ச்சுனன் மற்றும் பாஞ்சாலி சாமிகள் தேரில் அமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் 61 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேரை தோள்களில் சுமந்தவாறு வீதி உலா நடைபெற்றது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தீமிதி திருவிழா நிகழ்ச்சி நடந்தது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story