என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டாக்டர் தோட்டம் பகுதியில் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.
    X
    கண்டாக்டர் தோட்டம் பகுதியில் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.

    கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகள்- நேரு எம்.எல்.ஏ. ஆய்வு

    கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இவை சிதிலமடைந்துள்ளது. இதை சீரமைப்பது குறித்து  தொகுதி எம்.எல்.ஏ. நேரு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இதன் எதிரொலியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 7லட்சம் செலவில் புதுப்பிக்கவும், ரூ. 55 லட்சம் செலவில் கல்வி மையம், பல்நோக்கு சமூக நல கூடம் கட்ட  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி அரசாணை பெறப்பட்டது. 
    ஒவ்வொகு குடியிருப்புக்கும் தனித்தனி மின் அறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நகர மற்றும் கிராம அமைப்பு துறை மூலம் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அனைத்து குறுக்கு வீதிகளையும் புதிய சிமெண்ட சாலைகளாக மேம்படுத்துதல், இருபுற வாய்க்கால் கட்டைகளை கட்டுதல் போன்ற பணிகளுக்கு நிதி பெற கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பணிகள் குறித்து  நேரு எம்.எல்.ஏ.   குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சிற்றரசு, உதவி பொறியாளர் அணில்குமார், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, பணிகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும்  அப்பகுதி மக்களிடம் நேரு எம்.எல்.ஏ. விளக்கினார். ஆய்வின் போது உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×