என் மலர்
உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கோடை கால பயிற்சி முகாம்
புதுவையில் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
சின்ன வீராம்பட்டினம், மறைமலை அடிகள் நற்பணி மன்ற இரவு பாடசாலை மையத்தில், சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. தினமும் மாலை, 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு பயிற்சியாளர்கள் கொண்டு சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது.
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழித்திடும் வகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக சிவராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள், வண்ண உபகரணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார்.
ஓவிய பயிற்சியை ஓவியர்கள் ரவி, அன்புநிலவன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு அளித்தனர். நிகழ்ச்சியை அருண் நாகலிங்கம் ஒருங்கிணைத்தார். மறைமலை அடிகள் இரவு பாடசாலை பொறுப்பாளர்கள் கோவிந்தசாமி, விஜயகுமார், பாபு, இறையரசன் ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர்.
Next Story






