என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை செல்வகணபதி எம்.பி. அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினர்.
பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணை
பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணை செல்வகணபதி எம்.பி-அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினர்
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதியில் முதியோர் உதவித்தொகை ஆணையை செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ. வழங்கினர்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், முதலியார்பேட்டை தொகுதி முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப் பட்டது.
செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்கினர்.
பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தமிழரசன், மாவட்ட துணைத் தலைவர்கள் குமார், விஜயரங்கம் , நிர்வாகிகள் விஜயகுமார், கணகராஜ், திருச்செல்வம், பிரவின் குமார், பன்னீர் செல்வம், மவுளி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய செல்வகணபதி எம்.பி. முதலியார் பேட்டை தொகுதிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை அசோக் பாபு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.
Next Story






